பக்கத்து நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தயார் - ஈரான்


பக்கத்து நாடுகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறியுள்ளார்.

 

மத்திய கிழக்கு நாடுகளில் சௌதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் இடையில் நீண்ட காலமாக அதிகாரப் போட்டி நிலவி வருகிறது.

 

சிரியா மற்றும் ஏமன் நாடுகளில் நடைபெற்று வருகின்ற போர்களில் இந்த இரு நாடுகளும் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன.

 

இந்த பின்னணியில், பக்கத்து நாடுகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

 

இந்த பிரதேசத்தில் சகோதரத்துவமான உறவையே விரும்புவதாகவம், அமெரிக்காவும், இஸ்ரேலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக நினைப்பது தவறு என்றும் கூறியுள்ள அதிபர் ஹசன் ரவ்ஹானி, முஸ்லிம்களாக இருக்கும் நாம்தான் இந்த பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

 

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், ஈரானுடன் செய்து கொண்டு 6 நாடுகள் அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது.

 

ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ஈரான் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

Add new comment

1 + 0 =