நோதாஜயின் சாம்பலை இந்தியா பெறாதது ஏன்?


ஜப்பானில் உள்ள நேதாஜியின் சாம்பலை இந்தியா இதுவரை  எடுத்துச் செல்லாதது பற்றி இந்தியாவுக்கான முன்னாள் ஜபபானிய தூதர் ஹிரோஷி ஹிரபயாஷி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய தேசிய ராணுவத்தைத் தோற்றுவித்தவரும் ஆவார்.

 

ஹெலிகாப்டர் விபத்தில் நேதாஜி இறந்துவிட்டதாக பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டுள்ளனர். அவருடைய அஸ்தி ஜப்பானில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சிலர் இதனை ஏற்பதில்லை.  

 

இந்த பின்னணியில் ஹிரோஷி ஹிரபயாஷி இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

 

நேதாஜியின் மகள் அனிதா போஸ் தனது தந்தையின் உடலை ஜப்பானிலிருந்து கொண்டுவர வேண்டும் என்று கடந்த ஆகஸ்ஃட் மாதம் நடுவண் அரசுக்கு கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

 

1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி தைவானில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் நேதாஜி காலமானார் என்றும் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அவரது உடல் ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ரென்கோஜி கோயிலிலேயே உள்ளது என்றும் அனிதா கூறியுள்ளார்.

 

தந்தையின் விருப்பப்படி, அவரது உடல் இந்தியாவுக்கு திரும்பி, கங்கையில் கரைக்கப்பட வேண்டும். எனவும் அனிதா போஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.

 

Add new comment

8 + 2 =