நீதிக்கும்,மாண்புக்கும் குரல் கொடுக்க இளைஞர்களுக்கு அழைப்பு


அநீதியால் பாதிகக்ப்பட்டோரை பாதுகாத்து, தேவையில் உழல்வோருக்கு உடல் உறுப்புகளை தானம் அளிதது மக்களை காக்க வேண்டும் என்று வியட்நாமின் வட பகுதியிலுள்ள ஆயிரக்கண்ககான கத்தோலிக்க இளைஞர்களுக்கு திருச்சபை தலைவர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

 

வியட்நாமின் வட பகுதியிலுள்ள 10 மறைமாவட்டங்களை சேர்ந்த சுமார் 15 ஆயிரம் இளைஞர்கள் ஹாய் ஃபோங் மறைமாவட்த்தில் சர்வதேச கண்காட்சி மையத்தில் 2 நாட்கள் நடைபெற்ற இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.

 

அநீதிக்கு இரையாகுவோரை கண்டுகொள்ளாமல் இருக்கும் மனநிலைக்கு எதிராக இந்த இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்றோரை புய் ச்சு மறைமாவட்ட ஆயர் தாம் வு தின்க் ஹெயு எச்சரித்துள்ளார்.

 

வீட்டு மற்றும் பள்ளி வன்முறைகளையும், மாணவர்களுக்கு இடையிலான சண்டைகளையும், மாணவர்கள் ஆசிரியாகளை அடிப்பதையும் தங்களின் திறன்பேசிகளில் காணொளி அல்லது புகைப்படம் எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்வோர் அதிகரித்து வருகின்றனர்.

 

அநிதியால் பாதிக்கப்படுவோரை விட்டுவிட்டு, எதிர்மறை எதிர்வினைகளை பெறுவதற்கு இவ்வாறு செ்ய்வதை இந்த ஆயர் குறிப்பாக சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அநீதியால் பாதிக்கப்படுவோரை காப்பாற்றுவதை விட்டு விட்டு இவ்வாறு செய்வது நலலதலல என்று தெரிவித்திருக்கும் இந்த ஆயர், கத்தோலிக்க இளைஞர்கள் கடவுளின் நண்பர்களாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

 

சமூகத்தில் பாதிக்கப்படுவோரை பாதுகாப்போராக கத்தோலிக்கர்கள் இருக்க வேண்டும் என்பதை ஆயர் தாம் வு தின்க் ஹெயு செய்தியாக வழங்கியுள்ளார்.   

Add new comment

5 + 10 =