நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30ம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில் இந்த கால அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

 

தேசிய தேர்வு முகமையின் மருத்துவ படிப்புகான பொது நுழைவு தேர்வு (நீட்) எழுதுவதற்கான வயது உச்சவரம்பை இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயம் செய்துள்ளது.

 

சிபிஎஸ்இ நிர்வாகம் இதுதொடர்பாக கடந்த ஜனவரி 22ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், பொது பிரிவினருக்கு 25 வயதும், இடஒதுக்கீட்டு பிரிவுக்கு 30 வயதும் என நிர்ணயித்திருந்தது.

 

இது தொடர்பான வழக்கில் அகில இந்திய பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு விவகாரத்தில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் தேர்வை எழுதலாம். இது வயது கட்டுப்பாடு என்பது கிடையாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும் கால அவகாசத்தை நீட்டிக்க  தமிழக அரசு தரப்பில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

 

இந்த விண்ணப்பத்துக்கான கால அவகாசத்தை ஒரு வாரம் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

என்வே,  நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7ம் தேதி வரை அவகாசம் வழங்கி தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Add new comment

3 + 1 =