நில சர்ச்சை தொடர்பாக தாக்கப்பட்ட கத்தோலிக்க வியட்நாம் பெண்கள்


கடந்த ஜனவரி மாதம் சட்டபூர்வமின்றி கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மீண்டும் உரிமை கோரியதால், கடந்த வாரம் வியட்நாமின் தெற்கு பகுதியில் குறைந்தது இரண்டு கிறிஸ்தவ பெண்கள் காவல்துறையினரால் தாக்குதலு்க்கு உள்ளாகியுள்ளனர்.

 

அதிகாரிகளே எங்களை சந்தியுங்கள், எங்கள் நிலங்களை எங்களுக்கே வழங்குகள்“ என்று எழுதப்பட்ட பாதாகைகளை தாங்கி கொண்டு பல பெண்கள் ஹோ ச்சி மின்க்-லுள்ள லோக் ஹொங் தோட்டத்தில் கூடினர்.

 

இந்த போராட்டத்தின்போது பெண்களின் தினதை குறிக்கும் விதமாக மலர்களையும் இந்த பெண்கள் வைத்திருந்தனர்.

 

உள்ளூர் அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்திய இரண்டு மாதங்களு்ககு பினன்ர் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

 

இந்த பெண்கள் குழுவின் பிரதிநிதிகள், தலைநகர் ஹனோயிலுள்ள அரச ஆய்வு குழுவிடமும் புகார் அளிக்கவும் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

ஆனால், அடையாளங்கள் ஏதுமில்லாத, முகமூடி அணிந்த காவல்துறையினர் இந்த பெண்களை இந்த தோட்டத்தில் இருந்து கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தியுள்ளனர்.

 

சட்டபூர்வமின்றி நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கோரிய பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

Add new comment

6 + 6 =