நிலவில் முதல் முதலில் முளைத்த பருத்தி விதை


நிலவில் முதன்முதலாக பருத்தி விதையை முளைக்க செய்வதில் வெற்றியடைந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

 

நிலவின் மறுபக்கத்தை ஆராய்வதற்கு சாங்-ங என்ற விண்கலத்தை ஜனவரி 3ம் தேதி சீனா அனுப்பியது.

 

அதனுடன் சோதனை முயற்சியாக பருத்தி, உருளைகிழங்கு மற்றும் சில பழங்களின் விதைகளும் அனுப்பிவைக்கப்பட்டன.

 

மூன்று கிலோ விதைகளை நிலவில் சாங்-ங விண்கலம் தூவிய நிலையில், பருத்தி விதைகள் முளைவிட்டு வளர்ந்து வருவதை  சாங்-ங விண்கலம் படம்பிடித்து அனுப்பியுள்ளது.

 

தாவரங்கள் வளர்வதற்கான சூழல் நிலவில் இருப்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளதாக சீன அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதனால், நிலவில் மனிதர்கள் குடியேறுகின்ற திட்டத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் கருதப்படுகிறது.

 

குறைவான புவிஈர்ப்பு விசை, அதிக கதிர்வீச்சு, வெப்பம் மற்றும் குளிர் நிலவி வரும் நிலவில், தாவரங்கள் மற்றும் விலங்குகள் வாழ்வதற்கான சூழல் மிகவும் கடினம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், சீனாவின் இந்த சாதனை முயற்சி பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

Add new comment

2 + 8 =