நிலவின் இருண்ட பகுதியை ஆராய சீனா முயற்சி


நிலவில் பல்வேறு நாடுகள் ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் நிலையில், அதன் இருண்ட பகுதியை, அதாவது பூமியிக்கு அருகில் வராமல் இருக்கும் பகுதியை ஆராய்வதற்கு சீனா தொடங்கியுள்ளது.

 

நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர், அங்கு தாவரங்களையும், பிற உயிரினங்களையும் அனுப்பி அவை அங்குள்ள சூழ்நிலைகளுக்கு தாக்குப்பிடிப்பதையும், அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புக்களையும் ஆவணப்படுத்துவதை நோக்கத்தோடு சீனாவின் ச்சாங்கெ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 

அதன் ஒரு பகுதியாக ‘ச்சாங்கெ மிஷன் 4’ திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது.

 

பூமியை நோக்கி வராத நிலவின் மற்றொரு பகுதியாக  கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் சாங் இ-4 என்னும் செயற்கைக்கோளை தரையிறக்க சீனா திட்டமிட்டுள்ளது.

 

 

சீனாவிலுள்ள ஷிசாங் விண்வெளி நிலையத்திலிருந்து லாங் மார்ச் 3பி என்னும் ராக்கெட்டில் ஒரு ரோபோ, நிலவை நோக்கி செலுத்தப்பட்டுள்ளது.

 

நிலவிலுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்து மேலதிக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சீனா திட்டமிட்டுள்ளது.

Add new comment

2 + 0 =