நிலவின் இருண்ட பகுதியில் தரையிறங்கிய சீனாவின் விண் ஊர்தி


சீனாவின் மறுபக்கத்தை ஆய்வு செய்வதற்காக சீன அனுப்பிய விண் ஊர்தி, வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

 

நிலவை ஆய்வு செய்வதற்காக லாங் மார்ச்-3பி என்ற ராக்கெட் மூலம் சீனா விண்ணில் ஏவிய சாங்’ங-4 செயற்கைக்கோள், வியாழக்கிழமை நிலவின் மறுபக்கத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

 

சீனா விண்ணில் செலுத்திய விணகலத்தில் நிலவின் மேற்பரப்பு மற்றும் உட்பகுதியை ஆய்வு செய்வதற்காக, தரையங்கும் ஊர்தி மற்றும் ஆய்வு ஊர்தி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

 

சீனா அனுப்பிய விண்கலம் டிசம்பர் 2ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது.

 

அதற்குரிய சுற்றுவட்டப் பாதையை நிலைநிறுத்தி, நிலவின் இருண்ட பகுதியில் முதல்முறையாக தரையிறங்க திட்டமிட்டிருந்தது.

 

புவியின் துணைக்கோளான நிலா, அதன் ஒருபக்கம் மட்டுமே பூமிக்கு தெரியும் வகையில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

 

இதன் காரணமாக அதன் மறுபுறத்திலுள்ள இருண்ட பகுதியை யாரும் பார்த்ததில்லை.

 

இந்த பகுதியை குறிப்பாக ஆய்வு இந்த சாங்’ங-4 செயற்கைக்கோள், நிலவின் மறுபக்கத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

 

இதுவரை எந்தவொரு விண்கலமும் இந்த பகுதியில் தரையிறங்கியது இல்லை.

 

உயிரியல் தொடர்பான ஆய்வு மேற்கொள்வதற்காக, உருளைக்கிழங்கு, பட்டுப்பூச்சிகள், விதைகள் ஆகியனவும் நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

Add new comment

1 + 16 =