நிறைவேறிய முத்தலாக் மசோதா, முழுமையாக நடைமுறையாகுமா?


பாரதிய ஜனதா கட்சி மிகவும் முனைப்போடு கொண்டு வந்துள்ள முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது.

 

ஆனால், முத்தலாக் மசோதாவை சிறப்புக் குழுவுக்கு அனுப்ப வலியறுத்திய காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழக அண்ணா திராவிட முன்னேற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்துள்ளனர்.

 

இதன் காரணமாக 245 பேர் ஆதரவுடன் இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

 

இதற்கு  எதிராக 11 பேர் மட்டுமே வாக்களித்தனர்.

 

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முத்தலாக் மசோதாவின் திருத்திய வரைவை தாக்கல் செய்த நிலையில் அது தொடாபான விவாதம் நடைபெற்றது.

 

முத்தலாக் மசோதா மதம், சமூகம், இறை நம்பிக்கைக்கு எதிரானதல்ல. முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது, பெண்களின் முன்னேற்றம் மற்றும் சுய மரியாதைக்காகவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இருபது இஸ்லாமிய நாடுகளே முத்தலாக் விவகாரத்து முறைக்கு தடை விதித்துள்ளன. மதச்சார்பற்ற நாடான இந்தியா ஏன் தடை விதிக்கக் கூடாது? என்று விவாதிக்கப்பட்டது.

 

ஆனால், இந்து, கிறிஸ்தவ மத சட்டங்களில் தலையிடமால் இருக்கின்ற அரசு  இஸ்லாமிய சட்டங்களில் மட்டும் ஏன் தலையிட வேண்டுமென எதிர்வாதமும் வைக்கபட்டது.

 

மக்களவையில் நிறைவேறிய இந்த மசோதா, குடியரவ தலைவரின் ஒப்புதல் பெற்றவுடன் சட்டமாகும்.

 

இவ்வாறு அவசர கதியில் முத்தலாக்கிற்கு எதிராக நிலைப்பாட்டை பராதிய ஜனதா கொண்டு வந்தாலும், எந்த அளவுக்கு உண்மையிலேயே நடைமுறையாகும் என்பது கேள்விக்கறியாகவே இருப்பதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Add new comment

13 + 7 =