நியூ காலிடேனியாவில் 7.6 அளவிலான கடும் நிலநடுக்கம்


பசிபிக் கடலின்  தெற்கில் அமைந்துள்ள நியு காலிடோனியாவில் கடலுக்கு அடியில் 7.6 என்ற ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது,

 

இதனால் பெரிய ஆழிப்பேரலை (சுனாமி) எழலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

நியு காலிடோனியா பிரான்சிஸின் கீழுள்ள தீவுக்கூட்டமாகும்

 

நிலநடுக்கத்தின் மையத்தில் இருந்து சுமார் 1000 கி.மீ.க்குள்ளான பகுதிகளில் கடும் சுனாமிப் பேரலைகள் தாக்க வாய்ப்பிருப்பதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.

 

எனவே, நியு காலிடோனியா, வனுவாத்து பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும், லாயல்டி தீவுகள் மற்றும் நியு காலிடோனியாவில் கடலோரத்தில் வாழும் மக்கள் எல்லாரும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

சேதங்கள் குறித்த இதுவரை தகவல்கள் வெளிவரவில்லை.

Add new comment

6 + 13 =