நாம் எதிர்கொள்ளும் மாபெரும் அச்சுறுத்தல் என்ன?


இவ்வலகில் நாம் எதிர்கொள்ள இருக்கினற் மிகவும் பெரிய அச்சுறுத்தல் பருவநிலை மாற்றமே என்று இயற்கை ஆர்வலரான டேவிட் ஹட்டன்பரோ கூறியுள்ளார்.

 

போலந்து நாட்டில் காட்வோஸ் நகரத்தில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் சபையின் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டில் அவர் இந்த கருத்தை கூறியுள்ளார்.

 

நம்முடைய நாகரிக வளர்ச்சி காரணமாக, இயற்கையாக ஏற்பட்ட அழிவுக்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அதனால் ஏற்படும் அழிவின் ஆழம் அதிகமாக இருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

 

மனிதரால் ஏற்படுத்தப்பட்ட செயற்கையான பேரிடர்களைதான் உலக நாடுகள் இப்போது எதிர்கொண்டு வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

 

பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்துக்குப் பிறகு, பருவநிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த ஆலோசனைகள் நடக்கும் முக்கிய மாநாடு இதுவாகும்.

Add new comment

11 + 6 =