நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி – திமுகவிடம் வைகோ ஐக்கியம்


கூட்டணி பற்றி திராவிட முன்னேற்ற கழக (திமுக) தலைவர் ஸ்டாலின் உறுதிகூற வேண்டும் என்று தெரிவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ திமுகவோடு கூட்டணியை உறுதி செய்துள்ளார்.

 

சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், மjதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ தெரிவித்துள்ளார்.

 

அடுத்த ஆண்டு வரக்கூடிய கூட்டணி பற்றி துரைமுருகன் கருத்து கூறியபோது, மதிமுக-வையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் தோழமை கட்சிகள் மட்டுமே என்று தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை வைகோ உறுதிப்படுத்தியுள்ளார்.

 

ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் மதிமுக-வின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்து கூட்டணி பிரச்சினைக்கு ஸ்டாலின் பதில் கூறிவிட்டார் என்று வைகோ கூறியுள்ளார்.

 

இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் திமுக அணிதான் வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற உழைக்கப் போவதாகவும் வைகோ தெரிவித்திருக்கிறார்.

Add new comment

1 + 1 =