நாடாளுமன்றத்தில் 2019 இடைக்கால பட்ஜெட் தாக்கல்


இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் தற்காலிக் நிதியமைச்சர் பியூஸ் கோயல் தேசிய ஜனநாயக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

 

நிதியமைச்சர் அரண் ஜெட்லி மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால், தற்காலிக் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள  பியூஸ் கோயல் இந்த இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

 

எல்லா வர்க்கத்து மக்களையும் தேர்தலில் வாக்கு வங்கிகளாக மாற்றும் வகையில், இந்த இடைக்கால தேர்தலில் பெரிய சலுகைகளும், வரி விலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

 

கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகள் பாஜக மீது பெருங்கோபம் கொண்டுள்ளனர்.

 

எனவே, விவசாயிகளுக்கு பெரும் திருப்தி அளிக்கும் உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவாசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 உதவித் தொகை வழங்கப்படும். இதற்கு 75,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

அடுத்ததாக, வருமான வரி செலுத்தும் உச்ச வரம்பு இரண்டரை லட்சத்திலிருந்து ஐந்து லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

மேலும், ஒன்றரை லட்ச ரூபாயை வரி விலக்கு உடைய முதலீடு செய்தால் ஒருவர் மொத்தமாக ஆண்டுக்கு ஆறரை லட்ச ரூபாய்க்கு வரி செலுத்த வேண்டியதில்லை.

 

இதனால் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

 

மீன்வளங்கள் மீது தனி கவனம் செலுத்துவதற்காக மீன்வளத்துறை என்ற தனி துறையை அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

"உஜ்வாலா" யோஜனாவின் கீழ் ஓராண்டுக்குள் கிராம புறங்களில் 8 கோடி எரிவாயு இணைப்புகள் இலவசமாக வழங்கப்படும்.

 

அமைப்பு சாரா தொழில்துறையில் புதிய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் 60 வயதில் ஓய்வு பெற்ற பின்னர், தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3000 வழங்கப்படும்.

 

இதுபோல பல சலுகைகள் இந்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால், இது இடைக்கால பட்ஜெட் என்பதால், இதற்கான நிதி எங்கிருந்து அரசுக்கு கிடைக்கும் என்றெல்லாம் எந்த தகவலும் அளிக்க்ப்படவில்லை.

 

அடுத்த வருகின்ற எந்தவொரு அரசும், இதனால் பெரும் பண நெருக்கடியில் அல்லல்படும் என்று ஆய்வாளாகள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த பட்ஜெட் சலுகை அறிவிப்பு எல்லாம் ஒரு தொடக்கம்தான் என்று இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

 

இது மக்களவை தோதலுக்கான வாணவேடிக்கை என்று முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

 

பல்வேறு தலைவர்களும் இந்த பட்ஜெட்டுக்கு ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.  

Add new comment

5 + 15 =