நவுரு தீவில் அகதிகளின் குழந்தைகள் வெளியேற்றம்


நவுருத்தீவில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருக்கும் அகதிகளின் குழந்தைகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

 

அங்கு சரியான மருத்துவ வசதியின்றி குழந்தைகள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில் குடும்பங்களுடன் குழந்தைகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

கிறிஸ்துமஸூக்கு முன்னதாக 3 குடும்பங்களையும் அவர்களின் குழந்தைகளையும் ஆஸ்திரேலியாவுக்கு மாற்றியுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

 

தற்போது  நவுரு தடுப்பு முகாமில் 7 குழந்தைகளே உள்ளன. இதிலுள்ள 4 குழந்தைகள் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்படவுள்ளன.  

 

நவுருத்தீவில் அடைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு முறையான மருத்துவ சிகிச்சையின்றி தவித்து வந்ததால், ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.

 

இந்த வழக்கிற்கு சுமார் இரண்டரை கோடி ரூபாயை ஆஸ்திரேலிய அரசு செலவழித்தது குறிப்பிடத்தக்கது. .

Add new comment

2 + 10 =