நவம்பர் மாதம் ஜப்பானில் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை


திருத்தந்தை பிரானசிஸ் இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜப்பானில் பயணம் மேற்கொள்கிறார்.  

 

அணு ஆயுதங்களுக்கு எதிராக பேச இந்த வாய்ப்பை திருத்தந்தை பயன்படுத்தி கொள்வார் என்று ஜப்பானிய ஆயர்கள் நம்புகின்றனர்.

 

ஜப்பானில் பயணம் மேற்கொள்ளும் விருப்பத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருந்தார்.

 

உலக இளைஞர்கள் தினக் கூட்டத்தில் கலந்து கொள்ள விமானத்தில் சென்றபோது, ஜப்பானில் பயணம் மேற்கொள்வதை திருத்தந்தை பிரான்சிஸ் உறுதி செய்துள்ளார்.

 

நவம்பர் மாதம் இரண்டாவது பாதியில் ஜப்பானில் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ், டோக்கியோ, ஹிரோசிமா மற்றும் நாகசாகியில் பயணம் மேற்கொள்வார் என்று ஒசாகா மறைமாவட்ட கர்தினால் மான்யோ மயேடா தெரிவித்திருக்கிறார்.

 

நாகசாகியை சேர்ந்த கர்தினால் மயேடா 2011 முதல் 2014ம் ஆண்டு வரை ஹிரோசிமாவில் ஆயராக பணியாற்றினார்.

 

இந்த இரண்டு நகரங்களும் இரண்டாம் உலகப்போரின்போது, அமெரிக்கா வீசிய அணு குண்டுவீச்சால் பெரும் பேரழிவை சந்தித்தன.

 

“நான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வத்திக்கானில் திருத்தந்தையை சந்தித்தேன். ஜப்பானில் அணு ஆயுதங்களுக்கு எதிராக பேச வேண்டுமென எனது விருப்பத்தை தெரிவித்தேன். அணு ஆயுதங்களை பயன்படுத்துவது மட்டுமல்ல, அவற்றை தயாரிப்பதே அறநெறிக்கு புறம்பானது” என்று திருத்தந்தை தெரிவித்ததாக இந்த கர்தினால் கூறியிருக்கிறார்.

 

கர்தினால் மான்யோ மயேடாவும், டோக்கியோ மற்றும் நாகசாகி பேராயர்களும் திருத்தந்தை பிரான்சிஸை கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி சந்தித்தனர்.

Add new comment

3 + 8 =