நல்ல அரசியல் அமைதி பணி செய்யும் – திருத்தந்தை


ஒருவொருக்கு ஒருவர் நம்பிக்கை, பிறரின் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பது ஆகியவை இல்லாவிட்டால் உலகில் அமைதி நிலவாது என்று வத்திக்கான் கூறியுள்ளது.

 

2019ம் ஆண்டு அமைதி தினத்தின செய்தியில் நல்ல அரசியல் பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் கருத்து தெரிவித்து்ளள நிலையில், வத்திக்கானின் இந்த செய்தியும் வந்துள்ளது.

 

“நல்ல அரசியல் அமைக்கான பணி” என்பது அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நாளின் தலைப்பாக இருக்கும் என்று இந்த செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.

 

உலக அமைதி நாளுக்கான திருத்தந்தையின் செய்தியானது டிசம்பர் மாத நடுவில் வழக்கமாக வெளியிடப்பட்டு, வத்திக்கான் தூதர்கள் வழியாக உலக நாடுகளின் தலைவர்களிடம் சமர்பிக்கப்படும்.

 

அரசியல் பொறுப்புணர்வு அனைத்து குடிமக்களையும் சேர்ந்தது என்பதையும், குறிப்பாக பாதுகாத்து ஆளும் பொறுப்பிலுள்ளோரின் கடமை என்பதையும் குறிப்பிடுவதாக திருத்தந்தை பிரான்சிஸின் செய்தி குறிப்பிடுகிறது என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.

Add new comment

2 + 4 =