தோதலில் மக்களோடு கரம் கோர்க்க உறுதிபூண்டுள்ள ஆயர்கள்


காங்கோ குடியரசில் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை தொடங்கியுள்ள நிலையில், மக்களோடு நின்று உரிமைகளுக்கு குரல் கொடுக்க வேண்டுமென அந்நாட்டு ஆயர்கள் உறுதிபூண்டுள்ளனர்.

 

தேசிய நாடாளுமன்ற தேர்தல் நிலைமையை திறனாய்வு செய்யும் அசாதாரணமான பொது அமாவின்போது, காங்கோ தேசிய ஆயர்கள் பேரவை இந்த உறுதி மொழியை வெளிப்படுத்தியுள்ளது.

 

இந்த தோதலில் இறைவாக்கினராகவும், ஆட்டின் இடையராகவும் பங்காற்றுவதற்கு இருக்கும் நிலையில் இந்த அசாதாரணமான அமர்வு கூட்டம் நடைபெறவதாக இந்த ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

 

காங்கோ ஜனநாயக குடியரசில் டிசம்பர் 23ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

 

இந்த கூட்டத்தில் தோதல் செயல்முறையை திறனாய்வு செய்து, வழிகாட்டுவதும், பரிந்துரை வழங்குவதும் அவசியம் என்று ஆயர்கள் விரும்பியதாக காங்கோ தேசிய ஆயர்கள் பேரவையின் பொதுச் செயலாளர் அருட்தந்தை டுனாதியன் நாஷோல தெரிவித்திருக்கிறார்.

Add new comment

12 + 5 =