தொழிலாளர் பாதுகாப்புக்கு மலேசியா – நேபாளம் ஒப்பந்தம்


மலேசியாவில் வேலை செய்ய செல்கின்ற நேபாளத் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

 

நேபாளம் தொழில்துறை அமைச்சர் கோகர்னா பிஸ்தா மற்றும் மலேசியாவின் மனித வளத்துறை அமைச்சர் குலசேகரன் தலைமையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, மலேசியாவுக்கு வேலைக்கு செல்கின்ற நேபாளத் தொழிலாளர்கள் எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.

 

விமானக் கட்டணம், விசா கட்டணம், மருத்துவ பரிசோதனை அத்தனைத்தை அந்த தொழிலாளியை வேலைக்கு அமர்த்தும் மலேசிய நிறுவனமே பொறுப்பேற்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.  

 

ஒப்பந்த தொழிலின் கால எல்லை 3 ஆண்டிலிருந்து 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர்களின் மாத சம்பளத்தை 7ம் தேதிக்குள் நிறுவனம் வங்கி கணக்கில் செலுத்தியிருக்க வேண்டும்.

 

போனஸ் மற்றும் அதிக நேரம் பணியாற்றுவதற்கான ஊதியம் மலேசிய அரசு நிர்ணயித்துள்ள தொகையை விட குறைவாக இருக்கக்கூடாது.

 

தொழிலாளர்களின் உடல் நலனையும், பாதுகாப்பை வேலைக்கு அமர்த்தும் நிறுவனமே உறுதி செய்ய வேண்டும்.

Add new comment

9 + 5 =