தைவான் லூர்து கூட்டமைப்பு பற்றி ஓய்வுபெற்ற பேராயர் எச்சரிக்கை


தைவான் லூர்து கூட்டமைப்புக்கு நிதி வழங்குவதை வெளிநாட்டு திருச்சபை நிறுவனங்கள் நிறுத்த வேண்டுமென ஓய்வுபெற்ற தைவான் பேராயர் ஆங்கிலத்தில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

 

இது போன்றதொரு கடிதத்தை சீன மொழியில் தைபெய் உயர் மறைமாவட்ட ஓய்வுபெற்ற 90 வயதான பேராயர் ஜோசப் டி-காங் கடந்த ஆண்டு மே மாதம் எழுதியிருந்தார்.

 

அதில், இந்த கூட்டமைப்பு ஹெச்ஐவி மற்றும் எயிட்ஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் இருந்து விலகி, பாலியல் ஒழுக்கம் மற்றும் மருந்து முறைகேடுகளை ஊக்குவிப்பதாக அவர் குற்றஞ்சாட்டி இருந்தார்.

 

ஆனால், எந்தவொரு நிறுவனமோ, தனிநபர்களோ இந்த கடிதத்திற்கு பதிலளிக்கவில்லை.

 

இந்த கூட்டமைப்பு ஏதோ மோசமானதை செய்து வருகிறது என்பதை திருச்சபையின் வெளிநாட்டு நிறுவனங்கள் அறிந்து கொள்ளவே இந்த ஆங்கில கடிதம் எழுதப்பட்டுள்ளதான் நோக்கமாக தெரிகிறது.

 

மேலும், லுர்து என்ற பெயரை இந்த கூட்டமைப்பு நீக்குவதற்கு அழுத்தம் கொடுக்கவும் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இவ்வாறு பெயரை மாற்றுவதன் மூலம் கத்தோலிக்க திருச்சபையில் பெயரில் அநீதியானவற்றை செய்வதை தடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Add new comment

14 + 4 =