தைவானில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான முடிவு


தைவானில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான நிலைபாடு எடுக்கும் நிலை உருவாகியுள்ளது.

 

ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

 

2 ஆண்டுகளில் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் அல்லது சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டுமென்று இந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

 

இது தொடர்பாக பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு தைவானில் நடத்தப்பட்டது.

 

இந்த வாக்கெடுப்பில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மககள்  எடுத்துள்ளனர்.

 

ஆனால், இவ்வாறு கருத்தறிவதால் கிடைக்கின்ற முடிவுகள் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்திரானதாக அமையாது என்று அந்நாட்டு அரசாங்கம் முன்பே தெரிவித்திருந்தது.

 

ஆனாலும், ஓரினசோர்க்கையாளர்களுக்கு எதிராக மக்களின் இந்த நிலைப்பாடு, ஓரினசோர்க்கையாளர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Add new comment

5 + 2 =