தேவாலய வளாக கொலையை கண்டிக்கும் பிலிப்பீன்ஸ் ஆயர்


பிலிப்பீன்ஸின் பாகோலோட் நகரின் தேவாலய வளாகத்திற்குள் சீன வணிகர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு நாட்டின் மத்திய பகதியிலுள்ள கத்தோலிக்க ஆயர் ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

பாகோலோட் நகரின் சகாய மாத திருத்தல வளாகத்தில் வைத்து 54 வயதான பிலிப்பின்ஸ் சீன வணிகரான அலெக்ஸ் யாவ் துப்பக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

யாவின் மனைவி மரிய தெரசா துப்பாக்கி தாக்குதலில் இருந்து உயிர் தப்பியுள்ளார்.

 

செப கூட்டத்தை விட்டு வெளியேறியபோது இந்த ஜோடி தாக்கப்பட்டது.

 

இந்த கொலைக்கான காரணத்தை காவல்துறை விசாரண செய்து வருகிறது.

 

சட்டத்தையும், ஒழுங்கையும் கடைபிடித்து வருகின்ற சமூகமான கிறிஸ்தவ சமூகத்தில் இத்தகைய இடங்களுக்கு இடமில்லை என்று பாகோலோட் மறைமாவட்ட ஆயர் பட்டிரிசியோ புசோன் தெரிவித்துள்ளார்.

 

கிறிஸ்தவ மற்றும் சமூக கொள்கைக்கு எதிரான இந்த கெடுங்செயலை கண்டிப்பதாக இந்த ஆயர் தெரிவித்துள்ளார்.

Add new comment

3 + 7 =