தேவாலய தாக்குதலுக்கு பின் பைகளுக்கு தடை


பிலிப்பீன்ஸின் தெற்கிலுள்ள டாவோ உயர் மறைமாவட்டத்தில்  பைகள், சாக்குகள், முதுகில் போட்டு கொண்டு செல்லும் பைகள் மற்றும் பெட்டிகள் தோவாலயத்திற்கும், சிற்றாலயத்திற்கும் உள்ளேயும் அனுமதிக்கபடாது என்று தடை விதிக்க்பபட்டுள்ளது.

 

பிலிப்பீன்ஸின் தெற்கிலுள்ள ஜோலோ என்ற இடத்தில் கார்மல் மலை மாதா பேராலயத்தில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பை தொடர்ந்து பேராயர் ரோமுலோ வில்லஸ் இந்த வழிகாட்டுதலை வழங்கியுள்ளார்.

 

சிறிய பர்ஸ்கள் மட்டுமே தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்படும் என்று ஜனவரி 29ம் தேதி வாசிக்கப்பட்ட சுற்றுமடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த பிரதேசத்தில் தற்போது இருக்கின்ற வன்முறை அச்சுறுத்தல் காரணமாக இந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் இதில் தெரிவித்துள்ளார்.

 

இந்த பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற ராணுவத்திற்கான சிறப்பு அதிகார சட்டத்தை ஆயரின் இந்த வழிகாட்டுதல் வலுப்படுத்தும் என்று ராணுவத்தின் பேச்சாளர் மேயர் ஜெனரல் ஃபிலிமோன் சன்தோஸ் கூறியுள்ளார்.

 

கத்தோலிக்க திருச்சபையின் இந்த நடவடிக்கையை ராணுவம் பாராட்டியுள்ளது.

Add new comment

2 + 4 =