தேவாலயங்களில் தேர்தல் பரப்புரைக்கு பிலிப்பீன்ஸ் மறைமாவட்டங்கள் தடை


இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலுக்காக தேவாலயங்களின் வளாகங்களில் பரப்புரை செய்வதற்கு பிலிப்பீன்ஸின் பல மறைமாவட்டங்கள் தடைவிதித்துள்ளன.

 

நடுநிலைமையை உறுதிசெய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

திருப்பலி நேரத்தில் வேட்பாளர்கள் காணிக்கைகளை கொண்டு வர அனுமதிக்க்ப்படமாட்டார்கள் என்று மணிலாவின் வடக்கிலுள்ள பாலாங்க மறைமாவட்ட ஆயர் லுபர்டோ சன்டொஸ் கூறியுள்ளார்.

 

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்கின்ற பங்கு மக்கள் அனைவரும், தேவாலய பணிகளில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

பிலிப்பீன்ஸின் தெற்கு பகுதியிலுள்ள முக்கிய தீவான லுஸானிலுள்ள காசிரஸ் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் ரொனால்டோ டிரோனா, திருச்சபை சொத்துக்களில் தேர்தல் பரப்புரைக்கு தடை விதித்துள்ளார்.

 

தேவாலயங்களின் பக்கத்தில் தேர்தல் பேரணிகளை நடத்துவதும் இந்த தடையில் உள்ளடங்கியுள்ளது.

 

மேலும், தோதலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகளால் நிதி ஆதரவு அளிக்கப்படும் பல ஜோடிகளுக்கான திருமணங்கள், திருமுழுக்குகள், உறுதிப்பூசுதல்கள் நடத்துவதற்கு அருட்தந்தையருக்கு ஆயர் டிரோனா தடை விதித்துள்ளார்.

 

அவர்களிடம் இருந்து நன்கொடை பெறுவதற்கும் அருட்தந்தையருக்கு தடை உள்ளது.

 

எந்தவொரு அருட்தந்தையரும் வெளிப்படையாகவோ, நேரடியாகவோ குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு அல்லது வேட்பாளருக்கு பரப்புரை செய்வதில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளனர்.

 

இவை அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன என்பது மக்களுக்கே தெரியும் என்று சோர்கோகோன் மறைமாவட்ட ஆயர் அர்துரோ பாஸ்டெ் கூறியதோடு, இது பற்றி எதற்கும் தடையை அறிவிக்கவில்லை.

Add new comment

1 + 13 =