தேவாலங்களுக்கு செல்வதை நிறுத்த சொல்லும் பிலிப்பீன்ஸ் அதிபர்


பிலிப்பீன்ஸ் மக்கள் தேவாலயங்களுக்கு செல்வதை நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுடெர்த்தே கூறியுள்ளார்.

 

கத்தோலிக்க தலைவர்களை தாக்கி பேசுவதை மீண்டும் தொடங்கியுள்ள அதிபர் டுடெர்த்தே, தற்போது ஒட்டுமொத்தமாக கத்தோலிக்க மக்கள் தேவாலயங்களுக்கெ செல்லக்கூடாது என்கிறார்.

 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடவுளை “முட்டாள்” என்று கூறிய பிலிப்பீன்ஸ் அதிபர், மக்கள் தாங்கள் செபம் செய்யக்கூடிய சிற்றாலயங்களை சொந்தமாகவே கட்டியமைத்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

“இத்தகைய முட்டாள்களுக்கு” பணம் செலுத்துவதற்காக தேவாலயங்களுக்கு நீங்கள் செல்லவே வேண்டாம் என்று டுடெர்த்தே கூறியுள்ளார்.

 

நாட்டில் நடைபெற்று வருகின்ற போதைப்பொருள் ஒழிப்பு தொடாபான கொலைகளை கண்டித்திருக்கும் ஆயர்களை குறிக்கும் விதமாக “இத்தகைய முட்டாள்கள்” என்ற சொல்லை டுடெர்த்தே பயன்படுத்தியுள்ளார்.

 

திருச்சபையின் நன்கொடைகளை தனது குடும்பத்திற்கு கொடுத்தததாக காலோகான் மறைமாவட்ட ஆயர் பாப்லோ விர்கிலோ டேவிட் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்ட பின்னர், திருச்சபை தலைவர்களை தாக்கி பேசவதை சமீபத்தில் டுடெர்த்தே மீண்டும் தொடங்கியுள்ளார்.  

Add new comment

1 + 0 =