தெலுங்கு கவிஞர் வரவர ராவ் மீண்டும் கைது


தெலுங்கு கவிஞர் வரவர ராவ் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த ஆண்டு தொடக்கத்தில் மகாராஷ்டிராவின் பீமா கோரேகானில் நடைபெற்ற சாதிய வன்முறை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ஐந்து செயல்பாட்டாளர்களில் அவர் ஒருவராவார்.

 

ஆகஸ்டு 29 முதல் இவர் வீட்டுக் காவலில் இருந்துவந்தார்.

 

அவரது இல்லம் அமைந்துள்ள ஹைதராபாத்தில் இருந்து அவரை புனேக்கு கொண்டு செல்வதற்க பிறப்பித்த பிடி ஆணை மராத்தி மொழியில் இருந்தது.

 

எனவே, அதனை ரத்து செய்ய வேண்டுமென அவருக்காக வாதிட்ட வழக்கறிஞர் முறையிட்டது.

 

இதனை புனே நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதால், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வரவர ராவ் ஆஜர் செய்யப்படுவார் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Add new comment

4 + 3 =