தெற்கு சூடான் அமைதி ஒப்பந்தம் ஆபத்தான தவறு – ஆயர்கள்


தெற்கு சூடானில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம் ஆபத்தான தவறு என்றும், நாட்டின் தலைமை அமைதியை நடைமுறைப்படுத்த சக்தி இல்லாமல் உள்ளது என்றும் அந்நாட்டு ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ஜூபாவில் நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து வெளியான மேய்ப்புப்பணி கடிதத்தில், தெற்கு சூடானின் மோதலுக்கு தீர்வு காணும் ஒப்பந்தத்தை மீளாய்வு செய்து மீண்டும் கையெழுத்திட ஆயர்கள் அழைத்தபோதும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த முயற்சி வெற்றியடையவில்லை என்பதை ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

அமைதிக்கான நல்லதொரு ஒப்பந்தம் இருந்தாலும், அதிலுள்ள வார்த்தைக்கு ஒத்த செயல்பாடுகள் இல்லை என்று ஆயர்கள் கூறுகின்றனர்.

 

வெளிப்படையாக மோதல்கள் குறைந்திருந்தாலும், எல்லா தரப்புகளும், சண்டையிடுவதிலும், அல்லது போருக்காக தயாரிப்பதிலும் மும்முரமாக உள்ளன என்று ஆயர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

மனித உரிமை மீறல்கள் அதிகரித்து மனித வாழ்வின் மதிப்பும், மாண்பும் மறக்கப்பட்டுவிட்டன என்று அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 

இந்த அமைதி ஒப்பந்தம் முற்றிலும் தோல்வியடைந்து, அமைதியை கொண்டு வராமல் போகலாம் என்று அஞ்சுவதாகவும் ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.  

Add new comment

5 + 14 =