தெற்கு சூடானுக்கு 77 மில்லியன் டாலர் மனிதநேய உதவி


தெற்கு சூடானுக்கு 77 மில்லியன் டாலர் மனித நேய உதவி கிடைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் பேரவை தெரிவித்திருக்கிறது.

 

நார்வே, நெதர்லாந்து, பெல்ஜியம், பிரிட்டன், சுவீடன், அயர்லாந்து, லக்சம்பர்க், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் கனடா நாடுகள் இணநை்து இந்த உதவி தொகையை வழங்கியுள்ளன.

 

ஊட்டச்சத்து, குடிநீர், சுகாதார பொருட்கள, உணவு பாதுகாப்பு, வாழ்வாதாரம், நலவாழ்வு மற்றும் கல்வியில் இந்த உதவித்தொகை பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

இடம்பெயர்ந்து வாழ்வோருக்கு அவசர கால புகலிடமும், உணவு அல்லாத சில முக்கிய உதவிகளை வழங்கவும் இந்த உதவித்தொகை பயன்படுத்தப்படும்.

 

இந்த மனிதநேய உதவி தொகையில் இரந்து, ஜோங்லி மாநிலத்திற்கு 33 சதவீதம், யுனிட்டி மாநிலத்திற்கு 20 சதவீதம், மேல் நைல் மாநிலத்திற்கு 17 சதவீதம் மற்றும் கிழக்கு இக்கவேட்டோரியா மாநிலத்திற்கு 8 சதவீதம் வழங்கப்படும் என்று விளக்கம் அளிக்க்ப்பட்டு்ளளது.

Add new comment

4 + 15 =