தெய்வ நிந்தனை வழக்கில் தண்டனை பெற்ற ஜகார்த்தா கிறிஸ்தவ ஆளுநர் விடுதலை


தெய்வ நிந்தனை வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் ஜகார்த்தா ஆளுநர் அஹோக் எனப்படும் பசுகி ஜாஹாஜா புர்னாமா, சிறை தண்டணை முற்றிலும் நிறைவடைதற்கு முன்னதாகவே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

கடந்த 50 ஆண்டுகளில் ஜகார்த்தாவின் முஸ்லிம் அல்லாத ஆளுநரில் முதல் நபராக அஹோக் பொறுப்பேற்றிருந்தார்.

 

முஸ்லிம் பெரும்பான்மையாக வாழுகின்ற இந்தோனீசியாவில், மத சகிப்புதன்மைக்கான சோதனையாக பார்க்கப்பட்ட தெய்வ நிந்தனை வழக்கில் 2017ம் ஆண்டு இவர் சிறை தண்டனை பெ்ற்றார்.

 

இந்த வழக்கு தொடர்பாக, இவருக்கு ஆதரவாகவும், முன்னதாக அதிபராக போட்டியிட்ட ஓர் அரசியல்வாதியை கண்டித்தும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

 

இரண்டு ஆண்டு சிறை தண்டனையில் 20 மாதங்களே தண்டனை அனுபவித்த நிலையில், வியாழக்கிழமை காலை நன்னடத்தை காரணமாக அஹோக் முன்னதாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கு வெளியே அவரது ஆதரவாளாகள் திரண்டு நின்று அவரை வாழ்த்தினர்.  

Add new comment

4 + 16 =