தென்னாப்பிரிக்க அரசு வழக்கு விசாரணை ஆணைய இயக்குநராக இந்திய பெண்


தென் ஆப்ரிக்காவின் அரசு வழக்குகளை விசாரிக்கும் ஆணையத்தின் புதிய இயக்குனராக இந்திய வம்சாவளி பெண் ஷமிலா பட்டோஹி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இதற்கு முன்னிருந்த ஷான் ஆபிரகாம்ஸ், முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவின் ஊழல் வழக்குகளில், ஜூமாவுக்கு சாதகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளது.  

 

எனவே, பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர், தென்னாப்ரிக்க அரசு புதிய இயக்குநரை நியமிக்கும் உத்தரவை, தென்னாப்ரிக்க அதிபர் சிரில் ராமாபோசா வழங்கினார்.

 

அடுத்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷமிலா பொறுப்பேற்பார்.

 

1986ம் ஆண்டு, வழக்கறிஞராக தனது தொழிற்முறை வாழ்க்கையை துவங்கிய ஷமிலா, முக்கிய வழக்குகளில் வாதிட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், 9 ஆண்டுகள் சட்ட ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

Add new comment

1 + 4 =