தூதரகத்தில் நுழைந்தவுடன் பத்திரிகையாளர் கசோஜி கொலை


இஸ்தான்புல்லில் இருக்கின்ற சௌதி அரேபியாவின் துணைத் தூதரகத்துக்குள் நுழைந்த உடனேயே, பத்திரிகையாளர் கசோஜி கொல்லப்பட்டதாக துருக்கி விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.

 

இந்த கொலையை முன்னரே திட்டமிட்டு,  கசோஜி கொல்லப்பட்டவுடன் அவரது உடல் பல துண்டுகள் ஆக்கப்பட்டது என்று இந்த அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. 

 

இந்த கொலை குறித்து சௌதி அரேபிய அரசிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லாததால் துருக்கி அதிகாரிகள் மிகவும் கோபமடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

.

கஷோக்ஜியின் உடலை இன்னும் கண்டெடுக்கவில்லை. அவரை கூலிப்படை குண்டர்கள கொன்றுவிட்டதாக சௌதி அரேபியா இப்போது கூறுகிறது.

 

ஆனால், துணை தூதரகத்திற்கு அவர் வந்தவுடன் வேலையை முடித்துவிட்டு கிளம்பி சென்றுவிட்டதாக தொடக்கத்தில் சௌதி அரேபியா கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Add new comment

2 + 11 =