துப்பாக்கி வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்க அமெரிக்க ஆயர்கள் கோரிக்கை


துப்பாக்கி வன்முறையை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்க ஆயர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்றுள்ள துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை தொ்டர்ந்து இந்த கோரிக்கை வந்துள்ளது.

 

சிக்காகோவிலுள்ள மெர்சி மருத்துவமனையில் நுழைந்த துப்பாக்கிதாரி ஜூவான் லோபஸ், நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துவிட்டு மருத்துவர் தாமரா ஓ‘நீலோடு சண்டையிட்ட பின்னர், அவரை சுட்டுக்கொன்றுவிட்டார்.

 

பாதுகாவலில் இருந்த காவல்துறை அதிகாரி சாமுவேல் ஜிமினெஸூம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 

இந்நிலையில், அமெரிக்காவில் புரையோடி கிடக்கும் துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க அரசு உனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் கர்தினால் டேனியல் என். திநார்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

 

துப்பாக்கிச்சூட்டினால் பலியானோருக்கு அஞ்சலியும், அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.    

Add new comment

4 + 9 =