தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்கா வலியுறுத்தல்


பாகிஸ்தான் நாட்டில் சுதந்திரமாக செயல்பட்டுவரும் தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 

இந்தியாவும், பாகிஸ்தானும் பதற்றம் ஏற்படுத்தும் ராணுவ நடவடிக்கைகளில் செயல்படாமல் பொறுமை காக்க வேண்டும் என அது கேட்டுக்கொண்டுள்ளது.

 

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சுமார் 3 மணி அளவில் பாகி்தானின் பாலகோட்டில் அமைந்திருந்த தீவிரவாதிகளின் பெரியதொரு முகாமை விமானத் தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக இந்தியா தெரிவித்தது.

 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 46 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

 

இதற்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் எல்லையில் புகுந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

 

இந்த தாக்குதல் சம்பவத்தை அறிந்ததும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பேயோ, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூட் குரோஷி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை தொலைபேசியில் அழைத்துப் பேசி விவரங்களைக் கேட்டறிந்துள்ளார்.

Add new comment

1 + 5 =