தீய எண்ணங்கள், ஆசைகளுக்கு எதிராக திருத்தந்தை எச்சரிக்கை


தற்பெருமையோடும், நல்ல உள்ளத்தோடும் சட்டத்தை அப்படியே வெளிவேடமாய் பின்பற்றும் மக்களுக்கு கடவுள் தன்னுடைய கட்டளைகளை வழங்கவில்லை.

 

மாறாக, தங்களின் பலவீனத்தை உண்மையாகவே ஏற்றுக்கொண்டு, தங்களுக்க உதவி, குணப்படுத்துதல் மற்றும் மீட்பு தேவை என்பதை உணருவோருக்கு கடவுள் தன்னுடைய கட்டளைகளை வழங்கியுள்ளதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

கடவுளின் அருளிரக்கம் இல்லாமல் பலவீனங்களில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள முடியும் என்ற நம்பி தங்களையே முட்டாளக்கி கொள்வதை நிறுததி விடுவோர் பேறுபேற்றோர்.

 

இதன் மூலம்தான் கவலை அடைந்த உள்ளத்தை குணப்படுத்த முடியும் என்று திருத்தந்தை பீட்டர் சதுக்கத்தில் பொது மக்களை சந்தித்தபோது தெரிவித்தார்.

 

தங்களின் தீய எண்ணங்களை ஏற்றுக்கொண்டு, பரிகார மற்றும் தாழ்ச்சியான உள்ளத்தோடு கடவுளுக்கும், மனத குலத்திற்கும் முன்னால் சான்றோராக அல்லாமல், பாவியாக நிற்போர் பேறுபெற்றோர் என்று அவர் கூறியுள்ளார்.

 

பத்து கட்டளைகளில் கடைசி இரண்டு கட்டளைகள் பற்றி தன்னுடைய விளக்கத்தை அளித்தபோது திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.

 

கடைசி கட்டளை பற்றிய விளக்கத்தில் தீய எண்ணங்களும், ஆசைகளும்தான் ஒவ்வொரு பாவத்திற்குத் காரணம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் விளக்கம் அளித்துள்ளார்.   

Add new comment

2 + 6 =