திவால் அறிக்கை சமர்பிக்கும் குவாமிலுள்ள உயர் மறைமாவட்டம்


திவால் அறிக்கை சமர்பிக்க போவதாக குவாமிலுள்ள அகானா உயர் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.  

 

அருட்தந்தையரின் பாலியல் உரிமை மீறல் பற்றிய பல குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்த திவால் அறிவிப்பு வந்துள்ளது.

 

பாதிக்கப்பட்டோருக்கு பெரியதொரு நீதி வழங்கும் நடவடிக்கையாக இது இருக்கும் என்று இந்த உயர் மறைமாவட்ட பேராயர் மைக்கேல் பைர்னஸ் கூறியுள்ளார்.

 

எதிர்காலத்தில் எழுகின்ற இது போன்ற பாலியல் மீறல்களுக்கு, உண்மையான தீர்வுகளை வழங்க இந்த திவால் அறிவிப்பு உதவும் என்று இந்த மறைமாவட்டத்தில் பணிபுரியம் அர்ட்டானி லியான்டர் ஜேம்ஸ் கூறியுள்ளார்.

 

குவாமில் மட்டும் 155 மில்லியன் டாலர் செலுத்த வேண்டிய 180 பாலியல் மீறல் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

Add new comment

1 + 0 =