Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
திரைப்படமாகும் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் திரைப்படமாக உருவாக்கப்படுவதாக இயக்குநர் சந்தோஷ் கோபால் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 18-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
2018ம் ஆண்டு மே-22ம் தேதி 100வது நாள் போராட்டத்தை முன்னிட்டு, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை பொதுமக்கள் நடத்த முயன்றனர்.
இதில் கலவரம் ஏற்பட்டதாக தெரிவித்து, காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 2 பெண்கள் உட்பட 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், . தமிழக அரசு தனியாக ஆணையம் அமைத்து இது பற்றி விசாரித்து வருகிறது.
இந்த சம்பவம் திரைப்படமாக உருவாக்கப்படுவதாக அறிவித்துள்ள சந்தோஷ் கோபால் என்கிற இயக்குநர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்ததேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் ஆவார்.
Add new comment