திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து


தமிழ் நாட்டில் மறைந்த கருணாநிதியின் தொகதியான திருவாரூருக்கு அறிவிக்கப்பட்டிருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ம் தேதி நடைபெறுவதாகவும் வாக்கு எண்ணிக்கை 31ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

கஜா புயல் நிவாரணப் பணிகளை மேற்கோள் காட்டி திருவாரூர் தொகுதிக்கான தேர்தலை தள்ளிவைக்கக் கோரி திமுக, அதிமுக உள்ளிட்ட காட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தன.

 

இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கடந்த 5 நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

கஜா புயல் நிவாரணப் பணிகள் தொடர்வதோடு, இடைத்தேர்தலின் போது முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதால்  இடைத் தேர்தலை தள்ளிவைக்க அவர் கோரிக்கை விடுத்தார்.

 

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் திருவாரூர் தேர்தலை ரத்து செய்துள்ளது.

Add new comment

5 + 4 =