திருவாரூர் தேர்தல் தடைக்கு நீதிமன்றம் மறுப்பு


திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

மறைந்த திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் திருவாரூர் தொகுதி காலியானது.

 

ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததால், இதற்கான வேட்புமனுத் தாக்கல் வியாழன் முதல் நடைபெற்று வருகிறது.

 

 

கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால் திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிடுவதற்கும், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மாரிமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

 

இதனை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

 

மனுவாகத் தாக்கல் செய்தால் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றும் அது கூறியுள்ளது.

 

திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 

இதனால், இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முழு விபரங்கள் இன்னும் சில தினங்களில் தெரிய வரும்.

Add new comment

2 + 3 =