திருவருகைக்காலம் விழிப்பு மற்றும் செபத்திற்கான காலம் – திருத்தந்தை


கிறிஸ்து பிறந்ததையும், கடவுளின் வாக்குறுதி நிறைவேறுவதையும் விட கிறிஸ்மஸ் காலத்தில் கிடைக்கக்கூடிய பரிசுகளையும், கிறிஸ்மஸ் மரத்தையும் கவனத்தில் வைத்துகொண்டு இந்த விழாவை இவ்வுலகு சார்ந்ததாக கிறிஸ்தவர்கள் மாற்ற முடியும்.

 

திருவருகை காலத்தின் முதல் ஞாயிறு திருப்பலி மற்றும் அதற்கு அடுத்த நாள் டோமுஸ் சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், விழிப்பு மற்றும் செபத்தில் திருவருகை காலத்தை கழித்து கிறிஸ் பிறப்பு விழாவுக்கு தயார் செய்ய வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

பீட்டர் சதுக்கத்தில் 20 ஆயிரம் பேர் கூடியிருந்த வேளையில், கிறிஸ்து பிறப்பை நாம் வாங்குகின்றவற்றை, செய்கிறவற்றை எண்ணிப்பார்த்து நுகர்வோரின் காலமாக நாம் மாற்ற நினைத்தால், இயேசு கடந்து சென்றுவிடுவார். நாம் அவரை கண்டுபிடிக்க முடியாது என்று திருத்தந்தை விளக்கினார்.

 

ஆனால், உள்ளங்கள் சோர்ந்து போக வேண்டாம். விழிப்போடு எப்போதும் செபியுங்கள் என்று சீடர்களிடம் இயேசு அறிவுறுத்தியதுபோல செய்யுங்கள் என்று திருத்தந்தை கோரினார்.

 

இவ்வாறு செய்தால் கஷ்ட காலத்தை கடந்து செல்ல வலிமை பெற்று இறைவனின் முன்நிற்க தகுதி பெறுவீாகள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

Add new comment

1 + 4 =