திருவருகைக்காலத்தில் போர் அல்ல, அமைதி உருவாக்குக – திருத்தந்தை


திருவருகைக்காலம் காலம் அமைதி இளவரசரின் வருகையை வரவேற்பதற்கு தயாரிக்கும் காலம். நம்மை சுற்றியுள்ளோருடன் போர் உருவாக்கும் காலமல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாட தயாரித்து கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள், அமைதியின் தூதர்களாக மாற அன்றாட வாழ்க்கையில் என்ன செய்கிறார்கள் என்பதையும் அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று டோமுஸ் சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியபோது மறையுரையில் கூறியுள்ளார்.

 

உலகில் அமைதி நிலவ நான் என்ன உதவி செய்கிறேன்? போருக்கு, வெறுப்புணர்வுக்கு, பிறரோடு பேசுவதற்கு ஏதாவது சாக்குப்போக்கை உருவாக்கி கொள்கிறேனா? நான் சாந்தமாக இருக்கிறேனா?நான் உறவு பாலங்களை உருவாக்குகிறேனா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

மெசாயா வந்த பின்னர் உருவாகும் அமைதி காலத்தை பற்றிய எசாயா இறைவாக்கினரின் தீர்க்கதரிசனத்தை பற்றி சிந்தனை வழங்கியபோது திருத்தந்தை பிரான்சிஸ் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

Add new comment

1 + 0 =