திருத்தலத்திற்கு வருகின்ற திருயாத்திரிகர்களுக்கு நல்ல வரவேற்பு – திருத்தந்தை


திருத்தலத்திற்கு வருகின்ற திருயாத்திரிகர்களுக்கு நல்ல வரவேற்பு கொடுப்பதோடு, அவர்களோடு இருக்கின்ற, இறைமக்களுக்கு செவிமடுக்கின்ற நல்ல அருட்தந்தையும் அவர்களுடன் இருக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.

 

இந்த திருயாத்திரிகர்கள் வருகின்றபோது, நீண்ட பயணத்தை நிறைவு செய்வோரை போல வரவேற்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கும் திருதந்தை பிரானசிஸ், திருத்தலம் பூட்டியிருப்பதை அவர்கள் பார்ப்பார்களானால் அது மிகவும் மோசமான பயணமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

 

பொருட்களுக்கும், நிதி தேவைகளுக்கும் அதிக கவனம் கொடுப்பது திருயாத்திரையின் முக்கிய பகுதியை மறந்து விடுவதற்கு சமமாகும். அவர்களைதான் முழுமையாக கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.

Add new comment

14 + 2 =