திருத்தந்தையை மீண்டு்ம் அழைக்க பிலிப்பீன்ஸ் ஆயர்கள் திட்டம்


2021ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸை மீண்டும் அழைக்க பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க திருச்சபை தலைவர்கள் திட்டமிட்டு்ளளனர்.

 

பிலிப்பீன்ஸில் கிறிஸ்தவம் பரவி 500வது ஆண்டை முன்னிட்டு திருத்தந்தையை அழைக்க இந்நாட்டு ஆயர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

 

ஆயர்கள் பேரவையின் இந்த வார அமர்வின்போது, ஆயர்களின் அழைப்பிதழை அனுப்புவது பற்றி விவாதிக்கப்படும் என்று ஆயர்கள் பேரவையின் பொதுச் செயலாளர் அருட்தந்தை மார்வின் மிஜியா கூறியுள்ளார்.

 

இந்த அமர்வில் எல்லாம் முடிவு செய்யப்படும் என்று கூறிய அருட்தந்தை மிஜியா, 2015ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் பிலிப்பீன்ஸில் பயணம் மேற்கொண்டதால், இந்த அழைப்பை திருத்தந்தை கவனத்தில் எடுத்துக்கொள்வாரா என்று தெரியாது என்று கூறியுள்ளார்.

 

ஆனால், 2021ம் ஆண்டு திருத்தந்தையின் அழைப்பிதழும், பயணத்திட்டமும் இருக்க வேண்டியது மிக முக்கியமானது என்று அவர் கூறினார்.

 

கிறிஸ்தவம் பிலிப்பீன்ஸில் பரவிய 500வது ஆண்டின் சிறப்பு தயாரிப்புகள் பற்றியும் இந்த ஆயர்களின் அமர்வின்போது விவாதிக்கப்படவுள்ளது.   

Add new comment

3 + 17 =