திருத்தந்தையை சந்திக்கும் பிலிப்பீன்ஸ் ஆயர்கள்


ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ரோம் நகரில் பயணம் மேற்கொள்ளும் ஆயர்களுக்குரிய கடமையை இந்த ஆண்டு பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் மேற்கொள்கின்றனர்.

 

தங்களின் மறைமாவட்டங்கள் மற்றும் மத குருக்கள் பற்றி அறிக்கை அளிக்க திருத்தூதர்களின் வாசற்படியென நம்பப்படும் ரோம் நகரில் பயணம் மேற்கொள்ள வேண்டிய கடமை எல்லா ஆயர்களுக்கும் உள்ளது.

 

திருத்தந்தையோடு நடைபெறுகின்ற கூட்டம் மிகவும் முக்கியமானது என்று பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் பொதுச் செயலாளர் மார்வின் மிஜியா கூறியுள்ளார்.

 

வத்திக்கானிலுள்ள வேறுபட்ட அலுவலகங்களை சென்று பார்ப்பதற்கு எல்லா நாட்டு ஆயாகளுக்கும் கிடைக்கின்ற நேரம் இதுவாகும்.

 

ரோமிலுள்ள முக்கிய பசிலிக்காக்களில் புனிதப் பயணம் மேற்கொள்ள ஆயர்களுக்கு கிடைக்கக்கூடிய மகத்தான வாய்ப்பும் இதுவாகும்.

 

பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே கத்தோலிக்க திருச்சபை மற்றும் அதன் தலைவர்களை தாக்கி பேசியுள்ளது பற்றி திருத்தந்தை பிரான்சிஸோடு விவாதிப்பார்களா என்பது தனக்கு தெரியாது என்று அருட்தந்தை மிஜியா கூறியுள்ளார்.   

Add new comment

3 + 2 =