திருத்தந்தையின் பதவி விலக கோர யாருக்கும் உரிமையல்ல – கர்தினால் முல்லர்


திருத்தந்தையின் பதவி விலக கோர யாருக்கும் உரிமையல்ல – கர்தினால் முல்லர்

 

பிரச்சனைகளையும், அவற்றுக்கு தீர்வு காண்கின்ற சிறந்த வழிகளையும் மக்கள் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம்.

 

ஆனால், திருத்தந்தைக்கு எதிராக முறையான குற்றச்சாட்டையோ அல்லது அவர் பதவி விலக வேண்டுமென்றோ யாரும் கோர முடியாது என்று ஜெர்மனி கர்தினால் ஜெர்ஹாய்சன முல்லர் கூறியுள்ளார்.

 

அத்தகைய பொது தாக்குதல்கள் திருச்சபையின் நம்பிக்கை தன்மையை கேள்விக்குட்ப்படு்த்தும் என்று வத்திக்கான் இன்சைடர் என்று இத்தாலிய இணையதளத்திற்கு அளித்த போட்டியில் முல்லர் கூறியுள்ளார்.

 

தற்போது நிலவுக்கு எல்லா தீமைகளுக்கும் எதிராக திருத்தந்தை செயல்படுவதோடு, எல்லா மக்களுக்கும் சிறந்ததை திருத்தந்தை பிரான்சிஸ் செய்து வருகிறார் என்பதில் திருப்பதி அடைந்துள்ளதாக முல்லர் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.

 

தற்போது இருக்கின்ற பிரச்சனைகளிலும், அவற்றுக்கு தீர்வு காண்பதிலும் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். அவற்றை நாம் கலந்துரையாட வேண்டும். ஒவ்வொருவரும், தங்களுடைய தனித்தன்மையுள்ள வழிகளில் இதனை நிறைவேற்ற வேண்டும்.

 

இத்தகைய கலந்துரையாடல் திருச்சபையின் மற்றும் அதன் சேவையின் நம்பிக்கை தன்மையை கேள்விகுட்பப்டுத்தும் தாக்குதல்களோடு முடிவு பெறும் பொது சர்ச்சையாக நிறைவு பெறக்கூடாது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.     

Add new comment

8 + 8 =