திருத்தந்தைக்கு கீழ்படியவில்லை குற்றச்சாட்டை மறுக்கும் கார்தினால் சென்


திருத்தந்தை பிரான்சிஸூக்கு கீழ்படியாமல் இருந்ததாக ஹாங்காங் மறைமாவட்ட பாப்பிறை தூதரின் குற்றச்சாட்டை, பொதுவெளியில் வெளிப்படையாக பேசுகின்ற கர்தினால் சென் மறுத்துள்ளார்.

 

மார்ச் 17ம் தேதி வெளியிட்ட மேயப்புப்பணி கடிதத்தில், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், திருத்தந்தை பிரான்சிஸ் வேறுபட்ட கருத்தை கொண்டிருந்தால் சில கத்தோலிக்க உறுப்பினர்கள் திருத்தந்தைக்கு எதிராக பேசுகின்றனர் என்று கர்தினால் ஜான் தொங் தெரிவித்திருந்தார்.

 

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள கர்தினால் சென், உண்மைகள் சரியானதா என்பதை இறைம்ககள் உய்த்துணர உதவுவதாக தெரிவித்துள்ளார்.

 

மார்ச் 22ம் தேதி வெளியான வலைப்பூ தகவலில், வத்திக்கான் வெளி விவகார தூதரான காதினால் பியேற்ரோ பரோலினும், மறைபரப்பு பேராயத்தின் தலைவரான கர்தினால் பெர்டினான்டோ பிலோனியும் தான் குழம்பிபோய்விட்டதாக கூறுவதாக கர்தினால் சென் குறிப்பிட்டுள்ளார்.

 

கத்தோலிக்க இறைநம்பிக்கை மற்றும் அறநெறிகளில் மிகவும் குறிப்பிட்ட நிலைமைகளில் திருத்தந்தை தவறிழைக்காமல் இருக்கிறார். ஆனாலும், உலக திருச்சபையின் தலைமை இறைப்பணியாளராக கிறிஸ்தவர்கள் அவருக்கு கீழ்படிய வேண்டுமேன கர்தினால் தொங் கூறியுள்ளார்.

 

திருத்தந்தையால் தெரிவு செய்யப்பட்ட ரோமன் கூரியாவுக்கு கத்தோலிக்கர்கள் கீழ்படிய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

ரோமன் கூரியாவுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதை தான் ஒப்புக்கொள்வதாகவும், திருத்தந்தையால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்கள் தவறு செய்யமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றும் கர்தினால் சென் தெரிவித்துள்ளார்.

 

சில விவகாரங்களில் திருத்தந்தை தவறாக இருக்கலாம். அவ்வேளையில் நான் எனது கருத்தை தெரிவிக்க வேண்டியது அவசியம். கர்தினால் என்பதால் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்க வேண்டியது தனது கடமை என்று கர்தினால் சென் கூறியுள்ளார்.

Add new comment

2 + 4 =