திருச்சபை மீதே தாக்குதலா -  டுடெர்டேக்கு சவால் விடுக்கும் பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர்கள்


திருச்சபை மீதான நாட்டின் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டேயின் தாக்குதலை தொடர்ந்து அனுமதிக்க போவதில்லை என்றும், திருச்சபையின் தலைவர்கள் யாரும் சவாலை சந்திக்கவும் போவதில்லை என்றும் பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

 

கடவுளுக்காக உறுதியாக நின்று, அவர் மீதான இறைநம்பிக்கையை தற்காக்க வேண்டும் என்றும், நமது அர்ப்பணங்களை புதுப்பித்து கொண்டு தேவாலயங்களை நிரப்புங்கள் என்று கத்தோலிக்கர்களுக்கு செல்வாக்கு மிக்க பொது நிலையினர் அமைப்பு அழைப்புவிடுத்துள்ளது.

 

கிறிஸ்தவராக அழைக்கப்பட்டுள்ளதற்கு மதிப்புமிக்க வாழ்க்கையை வாழவும் அது அழைப்புவிடுத்துள்ளது.

 

கிறிஸ்தவர்கள் தங்களின் இறைநம்பிக்கையை சொல்லில் இல்லாமல், நாம் கிறிஸ்துவின் நம்பிக்கைக்குரிய சீட்ர்கள் என்பதை வெளிக்காட்டும் விதமாக தைரியமாக அறிவிக்க வேண்டும் என்று இந்த பொது நிலையினர் அமைப்பின் தலைவர் ஜூலியேடா கூறியுள்ளார்.

 

பிலிப்பீன்ஸ் அதிபர் டுடேர்டேயின் மிக கடுமையாக தாக்குதலுக்கு முக்கிய இலக்காக இருக்கின்ற காலூகான் மறைமாவட்ட ஆயர் பாப்லோ வெர்கிலியோ டேவிடோடு இருப்பதாக அந்நாட்டின் கத்தோலிக்க இறையியல் சோசைட்டி தெரிவித்துள்ளது.

Add new comment

3 + 17 =