திருச்சபை நிலத்தில் கட்டடம் கட்டுவதை எதிர்க்கும் வியட்நாம் அருட்தந்தையர்


வியட்நாம் தலைநகரிலுள்ள திருச்சபையின் சொத்தில் அரசு நடத்துகின்ற பள்ளிக்கூடத்தை கட்டுவதற்கு எதிரான போராட்டத்தை ஹனோய் உயர் மறைமாவட்ட ஆயர்கள் அதிகரித்துள்ளனர்.

 

இந்த உயர் மறைமாவட்ட அலவலக தலைவர் அருட்தந்தை அல்போன்ஸ் பாம் ஹூங் மற்றும் அதன் காரித்தால் சமூக சேவை நிறுவனத்தின் தலைவர் அருட்தந்தை புருனோ பாம் பா குயேவும், இன்னும் 17 அருட்தந்தையரும் சோந்த ஹோயன் கியிம் மாவட்ட மக்கள் குழுவின் தலைமையகத்திற்கு சென்றுள்ளனர்.

 

பேராயர் இலத்தின் பிரதான வாயிலுக்கு முன்னால் இருக்கும் திருச்சபையின் நிலத்தில் ராங் அன் தொடக்கப்பள்ளி கட்டியமைக்கும் பிரச்சனை தொடர்பாக அவர்கள் விவாதிகக் சென்றதாக திருச்சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

உயர் மறைமாவட்டத்தின் பள்ளிக்கட்டடங்கள் அனைத்து இடிக்கப்பட்டு, அங்கு புதிய பள்ளி கட்டப்பட்டு வருவது உள்ளூர் கத்தோலிக்க மக்களிடம் கவலையை தோற்றுவித்து்ளளது என்று அருட்தந்தை ஹூங் கூறியு்ளளார்.

 

கடந்த மாதம் ஹனோயின் கர்தினால் பீட்டர் நகுயன் வான் ஹோனால் இந்த பணித்திட்டத்திற்கு எதிராக வழங்கப்பட்ட அவசர புகாரை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்று இந்த அருட்தந்தை கூறியுள்ளார்.

 

1970ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அரசால் கைப்பற்றப்பட்ட சொத்தில் 6,737 சதுரமீட்டர் பரப்பளவில் அரசு அதிகாரிகள் கட்டுமானம் அமைப்பதை நிறுத்த கர்தினால் ஹோனால் கூறியதாக தெரிகிறது.

 

கர்தினாலின் புகாரை எற்றுக்கொண்டு, இந்த கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த வேண்டுமென கோரிள்ளதாக அருட்தந்தை ஹூங் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Add new comment

6 + 2 =