திருச்சபை சொத்து சட்டம் வருந்தத்தக்கது – கேரள ஆயர்கள்


திருச்சபையின் சொத்துக்களை கட்டுப்படுத்துகின்ற சட்ட மசோதவை வருந்தத்தக்க நடவடிக்கை என்று கேரள கத்தோலிக்க ஆயர்கள் கண்டித்துள்ளனர்.

 

கேரள திருச்சபை சொத்த மசோதா (சொத்து்க்கள் மற்றும் நிறுவனங்கள்) 2019, வருந்தத்தக்க ஒன்று என்று கேரள கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் இணையதளத்தில் சுற்றுமட்ல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

இந்த மசோதாவை கொண்டு வருவதற்கான அவசியம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள விளக்கம் குழப்பமானதாகவும், தவறாகவும் உள்ளது என்று மார்ச் 3ம் தேதி எல்லா பங்குகளிலும் வாசிக்கப்படவுள்ள சுற்றுடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கேரள சட்ட சீர்திருத்த ஆணையத்தால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட இந்த மசோதா பொது மக்களின் பரிந்துரைகளை கேட்டிருந்தது.

 

திருச்சபையின் சொத்து்களை மேலாண்மை செய்ய எந்தவொரு அமைப்பும் இல்லை என்ற தவறான எண்ணத்தின் அடிப்படையில் இந்த சட்டம் அவசியம் என்று இந்த மசோதாவின் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

 

திருச்சபை சொத்துக்கள் தவறாக கையாளப்பட்டால், அதனை கையாள எந்தவொரு அமைப்பும் இல்லை என்ற தவறான எண்ணத்தையும் இந்த மசோதா வழங்குகிறது. தவறான கையாளுதலின் புகார்களை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

திருச்சபையின் தற்போதைய அமைப்பு பற்றி திருப்பதி இல்லாமல் இருக்கின்ற எந்தவொரு திருச்சபை உறுப்பிரும் திருச்சபையின் அதற்கு சம்பந்தப்பட்ட இடத்தில் அதனை எழுப்பலாம் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add new comment

2 + 3 =