திருச்சபையை பாதுகாக்க திருத்தந்தை அழைப்பு


திருச்சபையை அழிக்க நினைப்போரிடம் இருந்து திருச்சபையை பாதுகாக்க வேண்டுமெனறு திருது்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்துள்ளார்.

 

இறுதி ஆவணத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றதை தொடர்ந்து, உலக மாநாட்டில் பற்கேற்றவர்களுக்கு நன்றி செலுத்திய பின்னர், திருச்சபை உறுப்பினர்கள் பாவிகளாக இருந்தாலும், நமது தாய் திருச்சபை புனிதமானது.

 

ஆனால், நமது பாவங்களால், நம்மை குற்றஞ்சாட்டுபவர் எப்போதும் தனக்கு சாதகமாக்கி கொள்கிறார்.

 

உலகின் சில பகுதிகளில், கிறிஸ்துவிடம் கொண்ட இறைநம்பிக்கையால் கிறிஸ்தவர்கள் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர்.

 

திருச்சபை மீது தொடர் குற்றச்சாட்டுகள் சுமத்துவது இன்னொரு சித்ரவதை வகையாகும். திருச்சபை மீறு சேறு பூசுவதற்காக இது நடைபெறுகிறது.

 

திருச்சபையை அழுக்காக்கிவிட முடியாது, அதன் குழந்தைகள் அழுக்காக இருக்கலாம்.

 

அவர்களின் தாய் அப்படியல்ல. எனவே, தாயை பாதுகாக்க வேண்டிய தருணம் இதுவென திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.

 

பெரிதாக குற்றஞ்சாட்டுபவர் தாய் மீது தாக்குதல் நடத்த விரும்புவதால், இது மிகவும் கடினமான தருணம் என்று திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

Add new comment

8 + 1 =