தினமும் காவல்தூதரிடம் பேசுங்கள் – திருத்தந்தை பிரான்சிஸ்


தினமும் தங்களின் காவல்தூதரிடம் பேச வேண்டும் என்று வரோகிளாவ் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்ற குழந்தைகளிடம் திருத்தந்தை பிரானசிஸ் கூறியுள்ளார்.

 

அன்பு குழந்தைகளே உங்களுடைய வாழ்க்கைப் பயணம் சற்று கடினமானது. நீங்கள் சிகிச்சை பெற வேண்டும். நோய் நீங்கி வெற்றியடைய வேண்டும் அல்லது நோயோடு வாழ வேண்டும். இது எளிதானதல்ல என்று குழந்தைகள், அவர்களின் பெற்றோர் மற்றும் சுகாதார பராமரிப்பு வழங்கு நிபுணர்கள் ஆகியோரை திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கானில் சந்திக்கையில் தெரிவித்தார்.

 

ஆனால், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிறரின் உதவியோடு வாழ்க்கையில் வெற்றிக்கொள்ளக்கூடிய கடினமான காரியம் எதுவுமில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

 

“கடவுள் ஒவ்வொருவருக்கும் காவல்தூதரை வழங்கியுள்ளார். அவர் நமக்கு வாழ்க்கையில் உதவுவார்” என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

 

உங்களது காவல்தூதரோடு பேசுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். அவர் உங்களை கவனித்து கொள்வார். ஊக்கமூட்டுவார். வாழ்க்கையின் வெற்றிக்கு வழிநடத்துவார் என்று திருத்தந்தை புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்ற குழந்தைகளிடம் தெரிவித்திருக்கிறார்.

Add new comment

7 + 3 =