தவக்காலத்தில் பிறரை பற்றி கிசுகிசுப்பதை விட்டுவிட கோரும் திருத்தந்தை


நமது தவறுகளையும், குறைபாடுகளையும் திருத்தி கொள்வதற்கு மாறாக, பிறரை பற்றி மோசமாக கிசுகிசுக்க விரும்புவதை நீக்கிவிட மனதை ஒருகிணைப்பதற்கு தவக்காலம் மிகவும் சிறந்தது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

உங்கள் சகோதரனின் கண்ணில் உள்ள துரும்பை நீங்கள் பார்ப்பது ஏன்? முதலில் உங்கள் கண்களிலுள்ள விட்டத்தை பார்க்காமல் உன் சகோதரன் கண்ணிலுள்ள துரும்பை எடுக்க விடு என்று நீங்கள் எவ்வாறு கேட்கலாம் என்கிற வசனத்தை விளக்கி கருத்து கூறுகையில், திருத்தந்தை பிரான்சிஸ் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்.

 

நமது பாவங்களை தெளிவாக அறிந்து கொள்வதைவிட பிறரின் குறைபாடுகளையும், பாவங்களையும் கண்டறிந்து கண்டிப்பது நமக்கு எளிதாக உள்ளது என்று மூவேளை ஜெபத்தின்போது திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

இயேசு கிறிஸ்து ஊரெங்கும் பிறரின் குறைகளை கண்டுபிடித்து விமர்சித்து கொண்டெ செல்லவில்லை. நமது பாவங்களை முதலில் பார்த்து மனம் திரும்ப சொல்கிறார்.

 

நான் பாவம் எதுவும் செய்யவில்லை என்று யாராவது கொன்னால், உங்களிடம் இருக்கும் பாவங்கள் எதையும் நீங்கள் கண்டறியவில்லை என்றுதான் என்னால் கூற முடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.  

Add new comment

11 + 5 =